உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஜெர்மன் மொழி பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு

ஜெர்மன் மொழி பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு

ஈரோடு, தாட்கோ மூலம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினம் சார்ந்தவர்களுக்கு, ஜெர்மன் மொழி தேர்வு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பி.எஸ்.சி., நர்சிங், பொது நர்சிங், டிப்ளமோ இன் நர்சிங், பி.இ., மெக்கானிக்கல், பயோ மெடிக்கல், மின்னணு பொறியியல், பி.டெக்., ஐ.டி., தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். 21 முதல், 35 வயதினருக்கு, 9 மாதம் விடுதியில் தங்கி படிக்க தேவையான செலவை தாட்கோ ஏற்கும். தகுதியான நபர்களுக்கு ஜெர்மனி நாட்டில் பணிபுரியவும், ஆரம்ப கால ஊதியம், 2.50 லட்சம் - 3 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டும் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். விருப்பமுள்ளோர், www.tahdco.comஎன்ற இணைய தளத்தில் பதிவு செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !