கறவை மாடு வளர்ப்பு பயிற்சிக்கு அழைப்பு
ஈரோடு; ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் செயல்படும் கால்நடை மருத்துவ பல்கலை கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், கறவை மாடு வளர்ப்பு குறித்து வரும், 30ம் தேதி பயிற்சி வழங்கப்படவுள்ளது.பயிற்சி கட்டணம், 590 ரூபாய். பயிற்சியுடன், சான்றிதழ், பயிற்சி புத்தகம், மதிய உணவு, சிற்றுண்டி வழங்கப்படும். 0424-2291482 என்ற எண்ணில் முன்பதிவு செய்யலாம். இத்தகவலை பல்கலை தலைவர் வடிவு, செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.