எஸ்.டி., மக்களுக்கு முகாம்
அந்தியூர்:அந்தியூர் தாலுகா அலுவலகத்தில், எஸ்.டி., மக்களுக்கான சிறப்பு முகாம் நேற்று நடந்தது. மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சுடலைமணி தலைமை வகித்தார். ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சாதி சான்று, வருமான சான்று, நலவாரிய அட்டை ஆகிய சேவைகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பர்கூர், கிணத்தடி சோளகா, காக்காயனுார் மலை கிராமங்களிலிருந்து நுாற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அந்தியூர் தாசில்தார்சக்திவேல், பர்கூர் வி.ஏ.ஓ., பாபு உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.