மேலும் செய்திகள்
29ம் தேதி மின்தடை
27-Jul-2025
பவானி, அம்மாபேட்டை, பவானி சாலையில் கரிய காளியம்மன் கோவில் அருகே, நேற்று முன்தினம் இரவு, 10:30 மணியளவில், பவானியை நோக்கி சென்ற போர்டு பிகோ கார், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது மோதியது. காரை ஓட்டி வந்தது சித்தோடு, கோஆப்ரேடிவ் காலனியை சேர்ந்த சிவில் இன்ஜினியர் கவுதமன், 31, என தெரியவந்துள்ளது.இவர் நேற்று முன்தினம் காலை, சேலம் மாவட்டம் கொளத்துாரில் உள்ள சொந்த ஊருக்கு காரில் சென்றுவிட்டு, இரவு வீடு திரும்பியுள்ளார். அப்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில், டிரான்ஸ்பார்மரில் தீப்பொறி ஏற்பட்டு சத்தம் வந்ததால், அக்கம்பக்கத்தினர் வந்து மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய அதிகாரிகள், மின் இணைப்பை துண்டித்தனர். மின்தடையால், பழைய மாரியம்மன் கோவில் வீதி, குபேரன் நகர், சிவசக்தி நகர், சாய் நகர், ஜலகண்டாபுரம், லட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் நேற்று காலை, 10:00 மணி வரை மின்சாரம் இன்றி, இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.அம்மாபேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
27-Jul-2025