மேலும் செய்திகள்
தொழிலில் நஷ்டத்தால் வியாபாரி விபரீத முடிவு
27-May-2025
பவானி, பவானி, அந்தியூர் பிரிவு அருகே மார்க்கெட் வீதியை சேர்ந்தவர் விஜயன், 55; தச்சு தொழிலாளி. பவானியில் சொந்த வீடு உள்ளது. ஜாகத்தில் நேரம் சரியில்லாததால், வாடகை வீட்டில் மனைவி, மகனுடன் வசித்தார். வாடகை வீட்டில் இருந்தது போதும். சொந்த வீட்டுக்கு சென்று விடலாம் என்று, மகன், கார்த்திகேயன், 28, விஜயனிடம் கூறியுள்ளார்.இதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது உளியால் மகன் தலையில் அடித்துள்ளார். ரத்த வெள்ளத்தில் விழுந்த மகனை, பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தார். இந்நிலையில் வீட்டுக்கு வந்த விஜயன், மகனை தாக்கியதால் மனவேதனை அடைந்தார். வீட்டு முற்றத்தில் துாக்கிட்டு கொண்டார். இந்நிலையில் வீட்டுக்கு வந்த மனைவி கதவை வெகுநேரம் தட்டியும் திறக்காததால், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் உடைத்து உள்ளே சென்றார். துாக்கிட்ட நிலையில் தொங்கிய விஜயனை மீட்டு, பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மருத்துவ பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து பவானி போலீசார் விசாரிக்கின்றனர்.
27-May-2025