உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஓட்டல் கழிவை கொட்ட வந்தவர்கள் மீது வழக்கு

ஓட்டல் கழிவை கொட்ட வந்தவர்கள் மீது வழக்கு

காங்கேயம்: காங்கேயம் யூனியன் வீரணம்பாளையத்தில், நான்கு நாட்க-ளுக்கு முன் பகலில், வெளியூரில் இருந்து ஓட்டலில் மீதமான குப்பை மற்றும் உணவு கழிவுகளை கொட்டுவதற்காக காரில் பிளாஸ்டிக் கேன்களில் நிரப்பி எடுத்து வந்தனர். இதையறிந்த அப்பகுதி மக்கள் காரை வழிமறித்து ஓட்டுனரை சிறைபிடித்தனர். வீரணம்பாளையம் பஞ்., தலைவர் உமாநாயகி தலைமையில், காங்கேயம் காவல் போலீசில் புகாரளித்தனர். கழிவுகளை காரில் கொட்ட வந்த அவிநாசிபாளையம், வடுகை ஓட்டலை சேர்ந்த அரசு, ராஜீவ்காந்தி மற்றும் காளீஸ்வரன் ஆகியோர் மீது, காங்-கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ