மேலும் செய்திகள்
சென்டர் மீடியன் இடைவெளி விபத்து ஏற்பட வாய்ப்பு
01-May-2026
ஈரோடு, : சேலம் மாவட்டம், இடைப்பாடியை சேர்ந்த செங்கோட்டையன் மகன் சின்னசாமி, 28, லாரி டிரைவர். கரும்பு லோடை இடைப்பாடியில் இருந்து, லாரியில் ஏற்றி கொண்டு எழுமாத்துார் சக்தி சர்க்கரை ஆலையில் இறக்கினார். பின்னர் அங்கிருந்து, பவானி செல்ல கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பாலத்தின் அருகேயுள்ள, சென்டர் மீடியனில் நேற்று முன்தினம் நள்ளிவு 10:45 மணியளவில் பலமாக மோதினார்.இதில் லாரியின் முன்புற சக்கரம் சேதமானது. நள்ளிரவு நேரம் என்பதால் போக்குவரத்து இல்லை. சூரம்பட்டி போலீசார் உடனடியாக சென்று, லாரி டிரைவர் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். அப்போது அவர் மதுபோதையில் இருந்தது உறுதியானது. இதையடுத்து லாரியை, சூரம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் நிறுத்தினர். லாரி டிரைவர் மீது, போதையில் வாகனம் இயக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
01-May-2026