மேலும் செய்திகள்
அதிவேக கார் மோதி கூலி தொழிலாளி பலி
26-Oct-2025
ஈரோடு:அந்தியூர் சின்னதம்பி பாளையம் அந்தியூர் குடியிருப்பை சேர்ந்தவர் கார்த்தி, 37, டிரைவர். இவர் மீது பவானி அனைத்து மகளிர் போலீசில் போக்சோ வழக்கு உள்ளது. அந்தியூர் போலீசில் பெண் வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கு உள்ளது. சமீபத்தில் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த, 6ல் வழக்கு விசாரணைக்காக ஈரோடு முதன்மை மாவட்ட நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். ஆஜர்படுத்திய பிறகு மீண்டும் சிறைக்கு அழைத்து செல்ல போலீசார் தயாரான நிலையில் தப்பியோட முயன்றார். இதில் அவரது கால், இடுப்பில் காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக அவர் மீது வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
26-Oct-2025