உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இரு பிரிவுகளில் தொழிலாளி மீது வழக்கு

இரு பிரிவுகளில் தொழிலாளி மீது வழக்கு

ஈரோடு: ஈரோடு வீரப்பம்பாளையம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராமசாமி மகன் கிருஷ்ணன், 26, கூலி தொழிலாளி. இவர், 17 வயது சிறு-மிக்கு ஆசை வார்த்தை காட்டி காதலித்துள்ளார். இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. தற்போது சிறுமி இரண்டு மாத கர்ப்பமாக உள்ளார். ஈரோடு அரசு மருத்துவமனையில் மருத்-துவ பரிசோதனைக்காக வந்தார். அப்போது வயது தெரியவந்தது. இதுகுறித்து குழந்தைகள் நல குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்-டது. குழந்தைகள் நல குழுவினர் அறச்சலுார் போலீசில் புகார் செய்தனர். இதன் அடிப்படையில் குழந்தைகள் திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ பிரிவுகளில், கிருஷ்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை