உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மரக்கன்று நடவு செய்ய மத்திய அரசு அழைப்பு

மரக்கன்று நடவு செய்ய மத்திய அரசு அழைப்பு

ஈரோடு, :சுற்றுச்சூழல் கிளப் மிஷன் சார்பில், மத்திய கல்வி துறை, ஈரோடு மாவட்டத்தில் அனைத்து பள்ளி மாணவ, மாணவியர், தலைமை ஆசிரியர், முதல்வர்களுக்கு கடந்த ஜூன் தேதியிட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இதன்படி பள்ளி வளாகம், வீடுகள், பொது இடங்களில் மாணவ, மாணவிகள் தன் தாயுடன் இணைந்து மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும். அதை போட்டோ பிடித்து, எகே கிளப் மிஷன் லைப் போர்டலில் பதிவேற்ற வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்று நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில் இதுவரை, 963 பள்ளிகளில், 38,640 மரக்கன்று பள்ளி மாணவர்களால் நடவு செய்யப்பட்டுள்ளன. மாணவ, மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் அல்லது முதல்வர்கள் கேட்டு கொள்ளும் பட்சத்தில், மரக்கன்று இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மரக்கன்று நடப்பட்டால் மாணவன் அல்லது மாணவியை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கப்படும். அதில் அவர்களின் தாயின் பெயரும் இடம் பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி