கைதிகளின் மனைவிகளுக்கு தொந்தரவு மத்திய சிறை காவலர் சஸ்பெண்ட்
கோபி, கைதிகளின் மனைவிகளுக்கு, மொபைல்போனில் தொந்தரவு கொடுத்த, ஈரோடு மாவட்ட மத்திய சிறை இரண்டாம் நிலை காவலர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.ஈரோடு மாவட்டம் கோபி அருகே கச்சேரிமேட்டில், மாவட்ட சிறை இயங்குகிறது. இங்கு இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்தவர் சுரேஷ்குமார்,26. இந்த சிறையில் நீதிமன்ற காவலில் உள்ள சிறைவாசிகள் மட்டும் அடைக்கப்படுகின்றனர். இந்நிலையில் கைதிகளை சந்திக்க வரும், அவர்களது மனைவிகளிடம், மொபைல்போனில் சுரேஷ்குமார் தொந்தரவு கொடுப்பதாக, இரு கைதிகள் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக கோவை மத்திய சிறை ஜெயிலர் சரவணன், மாவட்ட சிறையில் விசாரணை நடத்தி சென்றார். இதன் அடிப்படையில் சுரேஷ்குமாரை நேற்று சஸ்பெண்ட் செய்து, கோவை மத்திய சிறை ஜெயிலர் சரவணன் உத்தரவிட்டுள்ளார்.