உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பாரியூர் கோவிலில் தேரோட்டம்

பாரியூர் கோவிலில் தேரோட்டம்

கோபி: கோபி அருகே பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் குண்டம் விழா நேற்று முன்தினம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்நிலையில் நேற்று காலை முதல் ஏராளமான பக்தர்கள், குண்டத்தில் மிளகு, மஞ்சள் துாள் மற்றும் குங்குமம் கலந்த உப்புகற்களை துாவி வழி-பட்டனர்.அதையடுத்து திருத்தேர் இழுக்கும் நிகழ்ச்சிக்காக விநாயகர் மற்றும் அம்மன் தேர், கொண்டத்துக்காளியம்மன் கோவிலின் ராஜகோபுரம் அருகே தயார் நிலையில் நிறுத்தப்பட்டது. தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், கோபி நகர செயலாளர் நாகராஜ் அடங்கிய குழுவினர் மாலை, 4:15 மணிக்கு முதலில் விநாயகர் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அதன்பின், அம்மன் தேர் வடம் பிடிக்கப்பட்டது. இரு தேர்களும் பாரியூர் பஸ் நிறுத்தம் வழியாக, ஆதிநாராயண பெருமாள் கோவிலை கடந்து, அமரபணீஸ்வரர் கோவிலை அடைந்தன. இதில் ஆயிரக்கணக்-கான பக்தர்கள் கலந்து கொண்டனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ