காசநோயில்லா விழிப்புணர்வு முகாம் 80 பேருக்கு நெஞ்சக ஊடுகதிர் பரிசோதனை
ஈரோடு, விஜயமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் நடந்தது.காசநோய் பரவும் விதம், அறிகுறி, பரிசோதனை, நடமாடும் எக்ஸ்ரே ஊர்தி பயன், ஊட்டச்சத்து உணவு மற்றும் உதவித்தொகை வழங்கல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், டாக்டர்கள் மலர்விழி, தேசப்பிரியா, மேற்பார்வையாளர் சுரேஷ், கற்பகம் உட்பட பலர் பங்கேற்றனர். முகாமில் பங்கேற்ற, 80 பேருக்கு காசநோய் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கி, நெஞ்சக ஊடுகதிர் பட பரிசோதனை, சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.