உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / முதலமைச்சர் கோப்பை கால்பந்து கொங்கு கல்வி நிலையம் முதலிடம்

முதலமைச்சர் கோப்பை கால்பந்து கொங்கு கல்வி நிலையம் முதலிடம்

ஈரோடு, சஈரோடு வ.உ.சி., பூங்கா மைதானத்தில், முதலமைச்சர் கோப்பை கால்பந்து போட்டி நடந்தது. இதில் பள்ளி அளவிலான போட்டியில், 41 அணிகள் பங்கேற்றன. ஈரோடு ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலைய பள்ளி மாணவர் அணி முதலிடம் பிடித்தது.இதேபோல் சீனாபுரத்தில் நடந்த முதலமைச்சர் கோப்பை ஹாக்கி போட்டியிலும், கொங்கு கல்வி நிலைய மாணவர் முதலிடம் பெற்றனர். இதன் மூலம் அக்., மாதம், சென்னையில் நடக்கும் மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.பள்ளி மாணவர்களை அறக்கட்டளை தலைவரும், ஒளிரும் ஈரோட்டின் தலைவருமான சின்னசாமி, தாளாளர் செல்வராஜ், உதவி தலைவர்கள் தெய்வசிகாமணி, பொருளாளர் குணசேகரன், சோமசுந்தரம், இணை செயலாளர் மீனாட்சிசுந்தரம், இணை பொருளாளர் நாகராஜ், பள்ளி முதல்வர் நதியா அரவிந்தன், அறக்கட்டளை உறுப்பினர்கள் பாராட்டி வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !