உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குழந்தைகள் தினத்தில் அரசுப்பள்ளியில் விருந்து

குழந்தைகள் தினத்தில் அரசுப்பள்ளியில் விருந்து

கோபி: கோபி அருகே சிங்கிரிபாளையம் பஞ்சாயத்து யூனியன் நடுநி-லைப்பள்ளியில், குழந்தைகள் தின விழா நேற்று கொண்டாடப்-பட்டது. இதையொட்டி மாணவ, மாணவியருக்கு, பலுான் உடைத்தல், பாட்டில்களில் நீர் நிரப்புதல், இசை நாற்காலி, கலை நிகழ்ச்சி என பல்வேறு போட்டி நடத்தி பரிசு வழங்கப்பட்டது. பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும், 61 மாணவ, மாணவியருக்கு, மதியம் விருந்து வழங்கப்பட்டது. கோபி வட்டார கல்வி அலுவலர் ஜெகநாதன், தலைமை ஆசி-ரியை கலைச்செல்வி, ஆசிரியர்கள் கற்பகம், விஜயா, கலையரசு, ஈஸ்வரன் மற்றும் முன்னாள் பி.டி.ஏ., நிர்வாகிகள் பங்கேற்றனர். * பவானி அரசு நிதி உதவி பெறும் துவக்க பள்ளியில், நுாற்-றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். குழந்-தைகள் தினத்தையொட்டி பவானி நகர்மன்ற தலைவர் சிந்துாரி, விருந்தளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி