பூங்கா குளத்தில் துாய்மை பணி
ஈரோடு, ஈரோடு, வ.உ.சி., பூங்கா வளாகத்தில் உள்ள குளத்தை துாய்மைப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.ஈரோடு வ.உ.சி., பூங்கா வளாகத்தில் செயற்கைக்குளம் அமைக்கப்பட்டு நீரூற்றி, மீன்கள் வளர்க்கப்படுகின்றன. குளத்துக்குள் விழும் இலைகள், துாசி போன்றவை அவ்வப்போது அகற்றப்படும். சுற்றி உள்ள சுற்றுச்சுவரில் பூங்காவுக்கு வருவோர் அமர்ந்திருப்பது வழக்கம். குளத்தின் உட்பகுதியில் பாசி பற்றியும், அதிகமாக அழுக்கு, சகதி தேங்கியதால் கடந்த, நான்கு நாட்களாக துாய்மை பணியாளர்கள் மூலம் குளத்தின் நீரை வெளியேற்றி, முழுமையாக சுத்தப்படுத்தும் பணிகள் நடக்கிறது.மறுபுறம், குளத்துக்கு வெளிப்பகுதியில் மண் சமன் செய்யப்பட்டு, தேவையற்ற புற்கள், செடிகள் அகற்றி துாய்மைப்படுத்தும் பணியும் நடந்து வருகிறது.ஓரிரு நாளில் துாய்மை பணி முடிந்ததும், குளத்தில் மீண்டும் நீர் நிரப்பப்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.