கூட்டுறவு வங்கி பணியாளர் ஆர்ப்பாட்டம்
ஈரோடு:தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்க மாவட்ட செயலர் மாரிமுத்து தலைமையில், வேலை நிறுத்தத்துடன், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், ஆர்ப்பாட்டம் செய்தனர்.விவசாய சங்க பிரதிநிதி ஈசன் முருகசாமி, கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் விவசாயிகளிடம் வசூலுக்கு வந்தால் அவர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என்று பேசியுள்ளார். பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் பேசிய அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கடன்களுக்கான தவணை தேதியை நினைவூட்டுவது, நீண்ட கால நடைமுறை. இதை விவசாயிகளும் உணர்வார்கள். இவற்றுக்கு மாறாக பேசி வரும் ஈசன் முருகசாமி மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகத்திலும் மனு வழங்கினர்.