உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தேங்காய் ஏலம் மாற்றம்

தேங்காய் ஏலம் மாற்றம்

ஈரோடு, ஈரோடு மாவட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வியாழன் தோறும் தேங்காய் ஏலம் நடக்கிறது. ஏல தினமான வரும், ௧௭ம் தேதி ஆடிப்பிறப்பு கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் மாவட்டத்தில் தேங்காய் சுடும் நிகழ்வுக்காக அதிக தேங்காய் தேவைப்படும். தற்போது நிலவும் தேங்காய் விலை உயர்வை விவசாயிகள், வணிகர்களுக்கு பயனுள்ளதாக மாற்றும் வகையில் வியாழனுக்கு பதில் முன்னதாக புதன்கிழமை தேங்காய் ஏலம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !