மேலும் செய்திகள்
முருங்கை சாகுபடி மதிப்பு கூட்டல் பயிற்சி
15-Jun-2026
புன்செய்புளியம்பட்டி:பவானிசாகர் வட்டார வேளாண்மைத்துறை சார்பில், அரசு மாநில எண்ணெய் வித்து பண்ணையில், தென்னை பயிரில் ஒருங்கிணைந்த உர மேலாண்மை மற்றும் பூச்சி மேலாண்மை குறித்த பயிற்சி, ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் (உழவர் பயிற்சி நிலையம்) அருள்வடிவு தலைமையில் நேற்று நடந்தது. வேளாண்மை உதவி இயக்குனர் யசோதா முன்னிலை வகித்தார். கோபி வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியர் சரவணன், தென்னை உழவியல் தொழில்நுட்பம் மற்றும் இயற்கை வேளாண்மை பற்றி விவசாயிகளுக்கு பயிற்சியளித்தார். பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் சத்தியசீலன், தென்னை பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை பற்றி விரிவாக கூறினார். மேலும் தென்னை சாகுபடி குறித்து பல்வேறு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.
15-Jun-2026