விழிப்புணர்வில் ஈடுபட்ட கலெக்டர்
கோபி;கோபி சட்டசபை தொகுதியில், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து, மேற்பார்வையாளர், உதவி வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம், கோபி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஈரோடு கலெக்டர் கந்தசாமி தலைமை வகித்தார். இதை தொடர்ந்து கோபி காய்கறி மார்க்கெட்டில், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சப்-கலெக்டர் சிவானந்தம், நகராட்சி கமிஷனர் மங்கையர்கரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.