உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாணவ, மாணவியருடன் கலெக்டர் கலந்துரையாடல்

மாணவ, மாணவியருடன் கலெக்டர் கலந்துரையாடல்

ஈரோடு:ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் கந்தசாமி தலைமையில், காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி நடந்தது. இதில், 2025-26ல் ஈரோடு மாவட்டத்தில் முதல்வரின் தனி திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற, 28 மாணவ, மாணவியருடன் கலெக்டர் கலந்துரையாடினார். உயர்கல்வி, கல்வியின் முக்கியத்துவம், புத்தகங்கள் படித்தல் உள்ளிட்ட தலைப்புகளில் கலெக்டர் அறிவுரை வழங்கி, திருக்குறள் புத்தகத்தை பரிசாக வழங்கினார். சி.இ.ஓ., மான்விழி, பள்ளி ஆசிரியர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ