வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சட்டத்தை சரியாக கடைபிடித்தால் ஆக்கிரமிப்பு அகற்றம், நோ பார்க்கிங், ஒரமாக நிறுத்தாதே பேருந்துகள். சாலை சந்திப்பில் இருந்து 100 மீட்டர் பேருந்து நிறுத்தும்
ஈரோடு மாநகரில் நாளுக்குநாள் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மீனாட்சி சுந்தரனார் சாலை, மேட்டூர் ரோடு, பெருந்துறை ரோடு, மணிக்கூண்டு, சத்திரோடு உள்ளிட்ட பிரதான சாலைகளில் போக்குவரத்து நிறைந்து காணப்படுகிறது. அதேசமயம் சாலையோரங்களில் அமைக்கப்படும் தற்காலிக கடை, தள்ளுவண்டி கடைகளால் கடும் நெரிசல் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சாலையோர கடைகளை அகற்றுவது தொட்பான ஆலோசனை கூட்டம், மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. வருவாய் மற்றும் நெடுஞ்காலை துறை அதிகாரிகள், வடக்கு, தெற்கு போக்குவரத்து போலீசார், குறிப்பிட்ட சாலையோர வியாபாரிகளுடன், ஆணையர் அர்பித் ஜெயின் ஆலோசனை நடத்தினார். மாநகரின் மற்ற பகுதிகளை காட்டிலும் மணிக்கூண்டு, ஆர்.கே.வி.ரோட்டில் அதிக நெருக்கடி உள்ளது என்று, போக்குவரத்து போலீசார் கூறினர். இதேபோல் மற்ற துறை அதிகாரிகளும் மாநகரில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்தனர். கடைகளை அகற்றினால், அதற்கான மாற்று ஏற்பாடு செய்து தர வியாபாரிகள் வலியுறுத்தினர்.மாநகரில் சாலையோர கடைகளின் விபரம், நெருக்கடி ஏற்படும் இடம், நேரம் குறித்தும் விரிவான ஆய்வறிக்கை சமர்ப்பிக்குமாறும், அதன்பின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யலாம் எனவும் ஆணையர் தெரிவித்தார்.
சட்டத்தை சரியாக கடைபிடித்தால் ஆக்கிரமிப்பு அகற்றம், நோ பார்க்கிங், ஒரமாக நிறுத்தாதே பேருந்துகள். சாலை சந்திப்பில் இருந்து 100 மீட்டர் பேருந்து நிறுத்தும்