கம்யூ., கண்டன ஆர்ப்பாட்டம்
தாராபுரம், கேரள மாநில முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில், அமலாக்கத்துறை சோதனையை கண்டித்து, கம்யூ., கட்சியினர் தாராபுரத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாராபுரம் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் மாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மா.கம்யூ., செயற்குழு உறுப்பினர் கனகராஜ் முன்னிலை வகித்தார். வெங்கட்ராமன், மேகவர்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.