உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சமரச பேச்சுவார்த்தையால் யூனியன் ஆபீசில் பரபரப்பு

சமரச பேச்சுவார்த்தையால் யூனியன் ஆபீசில் பரபரப்பு

சென்னிமலை: சென்னிமலை ஒன்றியத்தில், 22 ஊராட்சிகள் உள்ளன. வட்டார வளர்ச்சி அலுவலராக பாஸ்கர் பாபு பணியாற்றி வருகிறார். குப்பிச்சிபாளையம் ஊராட்சி தலைவரான பொன்னுசாமியை, பி.டி.ஓ., மரியாதை இல்லாமல் ஒருமையில் தரக்குறைவாக பேசியதாக புகார் எழுந்தது. இந்நிலையில் சென்னிமலை ஒன்றிய அ.தி.மு.க., ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில், 50க்கும் மேற்பட்டோர் பி.டி.ஓ.,விடம் நியாயம் கேட்க, யூனியன் அலுவலகத்துக்கு நேற்று வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னிமலை போலீசார் வரவழைக்கப்பட்டனர். புகார் தொடர்பாக யூனியன் கூட்ட அரங்கில் சமரச பேச்சுவார்த்தை, இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் நடந்தது. இரு தரப்பினரிடமும், இன்ஸ்பெக்டர் விசாரித்தார். இதை தொடர்ந்து இரு தரப்பிலும் தவறு உள்ளதாகவும், இனி இதுபோல் நிகழாமல் பார்த்துக்கொள்ளவும் அறிவுறுத்தினார். சமரச கூட்டத்தால், யூனியன் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை