உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பயணி தவறவிட்ட 27 சவரன் நகையை ஒப்படைத்த கண்டக்டர்

பயணி தவறவிட்ட 27 சவரன் நகையை ஒப்படைத்த கண்டக்டர்

அந்தியூர்:பயணி தவறவிட்ட 27 சவரன் நகையை, போலீசில் ஒப்படைத்து உரியவரிடம் சேர்த்த அரசு பஸ் கண்டக்டரை போலீசார் பாராட்டினர் . துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார், அடைக்கலபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பத்மா, 38; நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார். திருச்செந்துாரில் கோவில் திருவிழாவுக்கு கடந்த வாரம் சென்றார். நேற்று முன்தினம் இரவு திருச்செந்துாரில் இருந்து அந்தியூர் வரும் அரசு பஸ்சில் புறப்பட்டார். வீடு கட்ட பணம் தேவைப்பட்டதால், அக்காவிடம் இருந்து, 27 சவரன் நகைகளை பெற்று வந்துள்ளார். ஈரோடு பஸ் ஸ்டாண்டுக்கு நேற்று காலை பஸ் வந்தபோது, நகைப்பையை பஸ்சில் மறந்து வைத்து விட்டு இறங்கினார். சிறிது நேரம் கழித்து ஞாபகம் வரவே பதறினார். பயண சீட்டில் பதிவு செய்த மொபைல்போனை தொடர்பு கொண்டு பேசினார். அதில் பேசிய மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே உள்ள குராயூரை சேர்ந்த பஸ் கண்டக்டர் தன்னாசி, 36, அந்தியூர் போலீஸ் ஸ்டேஷனில் நகைப்பையை ஒப்படைத்து விட்டதாக கூறினார். அந்தியூர் ஸ்டேஷனில் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் தன்னாசி ஆகியோர், நகைப்பையை பத்மாவிடம் ஒப்படைத்தனர். நகையை ஒப்படைத்த கண்டக்டருக்கு அந்தியூர் போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை