உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாற்றுத்திறனாளிகள் மாநாடு

மாற்றுத்திறனாளிகள் மாநாடு

ஈரோடு:தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் வாழ்வுரிமை நல சங்கங்களின் கூட்டமைப்பின், நான்காவது மாநில மாநாடு ஈரோட்டில் நேற்று நடந்தது. கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் ராஜரத்தினம் தலைமை வகித்தார். அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலை வாய்ப்பு பாகுபாடின்றி கிடைக்க அரசு உறுதி செய்ய வேண்டும். மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். இதை கண்காணிக்க வருவாய் துறை மூலம் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்பு வணிக வளாகத்தில் ஆவின் பாலகம், சிறு கடைகள் அமைக்க பத்து சதவீதம் இடம் ஒதுக்க வேண்டும். அரசு துறையில் உள்ள பின்னடைவு காலி பணியிடங்களை சிறப்பு தேர்வு மூலம் உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவில் மாற்றுத்திறனாளி உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை