உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 1972ம் ஆண்டு தீர்மானத்தை நினைவூட்டி மாநகராட்சி குறைதீர் கூட்டத்தில் காங்., மனு

1972ம் ஆண்டு தீர்மானத்தை நினைவூட்டி மாநகராட்சி குறைதீர் கூட்டத்தில் காங்., மனு

ஈரோடு ஈரோடு மாநகராட்சியில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கமிஷனர் அர்பித் ஜெயின், மேயர் நாகரத்தினம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கடந்த வாரத்தை காட்டிலும் குறைவான கவுன்சிலர்கள் மட்டுமே பங்கேற்றனர்.காங்., சார்பில் அளித்த மனுவில், 'மேட்டூர் ரோடு வழியாக உள்ள ஈரோடு பஸ் ஸ்டாண்ட் நுழைவு பாதையில், ஆர்ச் அமைத்து சுதந்திர தின வெள்ளி விழா பேருந்து நிலையம் என வைக்க வேண்டும்.இதுகுறித்து, 1972ல் நடந்த ஈரோடு நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறிய நிலையில், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை' என தெரிவித்திருந்தனர். ஆர்ச் அமைப்பதற்கான செலவு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த கமிஷனர், ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.'தி.மு.க., ஆட்சியில் பல பஸ் ஸ்டாண்டுக்கு கருணாநிதி பெயரையே சூட்டுகின்றனர். அந்த வகையில் ஈரோடு பஸ் ஸ்டாண்டுக்கும், தி.மு.க., தரப்பில் கோரிக்கை எழும் முன், நாம் முந்தி கொள்ள வேண்டும்' என அக்கட்சியினர் தெரிவித்தனர்.இதை தொடர்ந்து, தெருவிளக்கு பிரச்னை, தண்ணீர் வசதி, வரி பிரச்னை உள்பட, 22 மனுக்கள் அளிக்கப்பட்டன. சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்குமாறு கமிஷனர் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை