மாணவர்களுக்கு காங்., சார்பில் உதவி
ஈரோடு: பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு, காங்., கட்சி சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி, ஈரோடு தெற்கு மாவட்ட காங்., அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் வழங்கினார். நிகழ்ச்சியில் மாநில பொது குழு உறுப்பினர் பால சுப்பிரமணியம், கொடுமுடி கிழக்கு கோபாலகிருஷ்ணன், கொடுமுடி மேற்கு முருகேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.