மேலும் செய்திகள்
குன்றத்துார் கொலையில் கட்டட தொழிலாளி கைது
09-Aug-2025
டி.என்.பாளையம் :டி.என். பாளையத்தை அடுத்த வடகள்ளிப்பட்டி, வ.உ.சி., வீதியை சேர்ந்தவர் முத்து, 60; கட்டட தொழிலாளி. மது குடிக்கும் பழக்கம் உண்டு. நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு கள்ளிப்பட்டி அருகே தண்ணீர் பந்தல் பிரிவில், வடிகால் திண்டில் அமர்ந்திருந்தார். அதீத போதையால் சாக்கடையில் விழுந்து விட்டார். வெகு நேரம் கழித்தே அப்பகுதி மக்கள் பார்த்து மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து பங்களாபுதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
09-Aug-2025