உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆயுத பூஜையிலும் தொடர் காத்திருப்பு போராட்டம்

ஆயுத பூஜையிலும் தொடர் காத்திருப்பு போராட்டம்

ஈரோடு:ஈரோடு, சென்னிமலை சாலை, அரசு போக்குவரத்து கழக மண்டல மேலாளர் அலுவலகம் முன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளனம் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான பணபலன்களை உடன் வழங்க வேண்டும். பணியில் உள்ள ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படி வழங்க வேண்டும். போக்குவரத்து கழகத்தில் பணி செய்யும் ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். அரசு போக்குவரத்து கழகத்தை தனியார் மயமாக்கக்கூடாது. ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை நடத்தி, உடன் அறிவிக்க வேண்டும். கடந்த, 2021 சட்டசபை தேர்தலில் போது தி.மு.க., வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளை நிறை வேற்றற வேண்டும், என வலியுறுத்தி நேற்று, 45வது நாளாக போராட்டத்தை தொடர்ந்தனர்.நேற்று ஆயுத பூஜை நாளிலும் குடும்பத்துடன் ஊழியர்கள், ஓய்வூதியர்கள் பங்கேற்றனர்.ஈரோட்டில் 356 பி.எஸ்.என்.எல்., '4ஜி' டவர்கள் சேவைமேலும் 97 இடங்களில் நிறுவ நடவடிக்கைஈரோடு, அக். 2பி.எஸ்.என்.எல்., துவங்கப்பட்டு, 25 ஆண்டு நிறைவடைந்த வெள்ளி விழா ஆண்டு கொண்டாடப்படுகிறது. பிரதமரின் தொலைநோக்கு திட்டத்தில், தேசிய அளவில், 37,000 கோடி ரூபாய் செலவில் தற்சார்பு பாரதம் என்ற திட்டத்தின் கீழ், ஒரு லட்சம், '4ஜி' மொபைல் டவர்கள் உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட கருவிகளுடன் நிர்மாணிக்கப்பட்டு, கடந்த, 27 ல் பிரதமர் மோடி அர்ப்பணித்தார்.ஈரோடு பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில், 356, '4ஜி' மொபைல் கோபுரங்களை, 35 கோடி ரூபாய் முதலீட்டில் நிறுவியுள்ளது. புதிதாக, 97, '4ஜி' டவர்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய அரசின் நிதியுதவியுடன், ஈரோடு மாவட்டத்தில் '4ஜி' நிறைவு பெற்ற, 9 டவர்கள், 9 கோடி ரூபாய் முதலீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தொலைபேசி வசதி இல்லாத தொலைதுார கிராமங்கள் மிக எளிதாக மொபைல் மற்றும் இணைய தள வசதி பெற முடியும். இக்கோபுரங்கள் சூரிய சக்தி, ஜெனரேட்டர், மின்சாரத்தில் இயங்கி குக்கிராமங்களுக்கு தடையில்லா இணைப்பு வழங்கும்.ஈரோடு மாவட்ட தரைவழி காப்பர் கேபிள்கள் முற்றிலும் நீக்கப்பட்டு, எங்கெல்லாம் கண்ணாடி இழை கேபிள்கள் வசதி செய்யப்பட்டுள்ளதோ, அங்கெல்லாம் கேட்டவுடன் அதிவேக இன்டர்நெட் வசதியுடன் எப்.டி.டி.எச்., தொலைபேசி இணைப்பு வழங்கப்படுகிறது, என பொது மேலாளர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை