உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வேட்பு மனு தாக்கல் பணி ஒப்பந்த பணியாளர் சாவு

வேட்பு மனு தாக்கல் பணி ஒப்பந்த பணியாளர் சாவு

ஈரோடு:ஈரோடு, கள்ளுக்கடைமேடைச் சேர்ந்தவர் சந்திரமோகன், 71, நெடுஞ்சாலை துறையில் பணி செய்து ஓய்வு பெற்றவர். தற்போது கலெக்டர் அலுவலகத்தில், நிலம் எடுப்பு பிரிவு சிறப்பு டி.ஆர்.ஓ., அலுவலகத்தில் ஒப்பந்த பணியாளராக பணி செய்தார். கிழக்கு தொகுதிக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று காலை, மாநகராட்சி அலுவலகத்தில் துவங்கியது. இப்பணியில் நிலம் எடுப்பு பிரிவு அலுவலர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.அவர்களுடன் காலை, 8:45 மணிக்கு மாநகராட்சி அலுவலகம் வந்த சந்திரமோகன் திடீரென மயங்கி கீழே விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை துாக்கி, 108 ஆம்புலன்ஸ் பைக் வாகன மருத்துவ உதவியாளரால் முதலுதவி செய்யப்பட்டு, வருவாய் துறை ஜீப்பில் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் மதியம், 12:00 மணிக்கு இறந்தார். ஈரோடு டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை