உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கூட்டுறவு பணியாளர்கள் வேலை நிறுத்தம் பயிர்கடன் செலுத்த முடியல என வருத்தம்

கூட்டுறவு பணியாளர்கள் வேலை நிறுத்தம் பயிர்கடன் செலுத்த முடியல என வருத்தம்

ஈரோடு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள், தமிழக அளவில் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதன்படி ஈரோடு மாவட்டத்தில், 700க்கும் மேற்பட்டோர் தற்செயல் விடுப்புடன் போராட்டத்தை நேற்றும் இரண்டாவது நாளாக தொடர்ந்தனர்.இந்நிலையில் ஈரோடு மாவட்ட உழவர் விவாதக்குழு செயலர் வெங்கடாசலபதி, கலெக்டர் மற்றும் தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனுவில் கூறியதாவது: தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க ஊழியர்களின் போராட்டத்தால், விவசாயிகள் பயிர் கடன் உள்ளிட்ட கடன் தவணையை செலுத்த முடியவில்லை. உரிய தேதியில் செலுத்தினால் மட்டுமே, வட்டி மானியம் பெற முடியும். கடந்த இரு நாட்களாக கூட்டுறவு வங்கிக்கு சென்று பணம் செலுத்தினால் வாங்க மறுக்கின்றனர். இன்று கட்டுவதற்கு பதில் நாளை கட்டினால், லட்சம் ரூபாய்க்கு, 9,000 ரூபாய் அதிகமாகும். விவசாயிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டமாவதால், அரசு தனி கவனம் செலுத்தி, நாளை (இன்று) முதல் கடன் தவணை தொகையை பெற வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை