உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்ஈரோடு, அக். 2-ஈரோட்டில், மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு குழு சார்பில், உலக ஓய்வூதியர் தின சிறப்பு கூட்டம் மாவட்ட தலைவர் மணிபாரதி தலைமையில் நடந்தது.கோட்ட செயலாளர் ராமசாமி, மாவட்ட செயலாளர் குப்புசாமி, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க இணை செயலாளர் கிரிஜா, சின்னுசாமி, காவேரி, ராஜசேகர் உட்பட பலர் பேசினர்.மத்திய, மாநில அரசுகள் புதிய ஓய்வூதிய திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.சிறந்த மருத்துவ சிகிச்சை, குடியிருப்பு, போக்குவரத்து, சுத்தமான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர்.* பவானிசாகர் அருகே, பாரதியார் சாந்தி இல்லத்தில் உள்ள மூத்த குடி மக்களுக்கு இந்திய மருத்துவ சங்கத்தின், சத்தியமங்கலம் கிளை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. பொது மருத்துவர், இதய நோய் நிபுணர், கண் சிகிச்சை நிபுணர், எலும்பு மருத்துவர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு மருத்துவர்கள், முதியவர்களை பரிசோதித்து சிகிச்சை அளித்தனர்.அனைவருக்கும் மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ