மேலும் செய்திகள்
அ.தி.மு.க., ஆண்டு விழா நலத்திட்ட உதவி வழங்கல்
18-Oct-2024
300 பேருக்கு நலத்திட்ட உதவிவழங்கிய மாநகராட்சி கவுன்சிலர்ஈரோடு, அக். 2௭-ஈரோடு மாநகராட்சி, 36வது வார்டு கவுன்சிலரும், தி.மு.க., விவசாய அணியின் மாநகர துணை செயலாளருமான செந்தில்குமார், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏழை எளிய மக்கள், அவரது வார்டில் பணியாற்றும் துாய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்குகிறார். இதன்படி நடப்பாண்டு தீபாவளியை முன்னிட்டு, துாய்மை பணியாளர் உட்பட பல்வேறு பிரிவு ஊழியர், மக்கள் என, 300 பேருக்கு, இனிப்பு, பட்டாசு பாக்ஸ், புத்தாடைகளை வழங்கினார். தனது சொந்த செலவில் கவுன்சிலர் செந்தில்குமார் வழங்கினார். நிகழ்ச்சியில் செந்தில்குமாரின் தந்தை பழனியப்பா நாராயணசாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். முன்னதாக விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் சைவ-, அசைவ சமபந்தி விருந்து நடந்தது. இதில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விழாவை கவுதம் மற்றும் 36வது வார்டு இளைஞர்கள் ஒருங்கிணைந்து நடத்தினர்.
18-Oct-2024