மேலும் செய்திகள்
27ல் வேளாண் குறைதீர் கூட்டம்
25-Sep-2024
நாளைய மின் தடை....
26-Aug-2024
ஈரோடு: ஈரோடு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மைய நிர்வாகி வெள்ளோடு துரைசாமி, கலெக்டர் அலுவலகத்தில், வழங்கிய மனுவில் கூறியதாவது: மாவட்டத்தில் உள்ள வி.ஏ.ஓ.,க்களில் பெரும்பாலும் காலையில் களப்பணிக்கு சென்று விடுகின்றனர். இதனால் சான்றிதழ் பெறுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுகிறது. மக்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.எனவே காலை, 10:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை வி.ஏ.ஓ.,க்கள் அவர்களுக்கான அலுவலகத்தில் கட்டாயம் இருக்க வேண்டும். மேலும் அவர்களின் வருகை, விடுமுறை போன்ற விபரங்களை அலுவலக பலகையில் தெரிவித்தால், மக்கள் ஏமாற்றம் அடைவது குறையும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.
25-Sep-2024
26-Aug-2024