உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மகளிர் சுய உதவிக்குழு சேவை கட்டடத்தின் துாண் விரிசல்

மகளிர் சுய உதவிக்குழு சேவை கட்டடத்தின் துாண் விரிசல்

கிருஷ்ணராயபுரம்,:பஞ்சப்பட்டி சமுதாயக்கூடம் அருகில் உள்ள, மகளிர் சுய உதவிக்குழு சேவை மைய கட்டடத்தின் துாணில் விரிசல் ஏற்பட்டுள்ளது.கிருஷ்ணராயபுரம் அடுத்த, பஞ்சப்பட்டி சமுதாயக்கூடம் வளாகம் அருகில், மகளிர் சுய உதவி குழு சேவை மைய கட்டடம் உள்ளது. இதன் வளாகத்தை, மகளிர் சுய உதவிக்குழுவினர் பயன்படுத்தி வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக, வளாகத்தை சரியாக பயன்படுத்தாததால் வளாகம் முன்பகுதியில் உள்ள துாண்களில் விரிசல் ஏற்பட்டு, கீழே சரிந்து விழுகின்ற அபாயம் உள்ளது. மேலும் கட்டடம் அருகில் பள்ளி மாணவ, மாணவியர் சென்று வருகின்றனர். எனவே, விரிசல் ஏற்பட்டுள்ள துாண்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை