பஸ் ஸ்டாண்டில் கூட்டம்
ஈரோடு: காலாண்டு தேர்வு முடிந்து கடந்த மாதம், 27ம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.நேற்றுடன் விடுமுறை நிறைவு பெற்று, இன்று பள்ளி திறக்கப்படவுள்ளது. இதனால் சொந்த ஊருக்கு வந்தவர்கள் நேற்று பணியிடங்களுக்கும், படிக்கும் ஊர்களுக்கும் திரும்பினர். இதனால் நேற்று காலை முதலே. ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் கூட்டம் வழக்கத்துக்கு மாறாக காணப்பட்டது. அதேசமயம் காலையில் கணிசமான அளவே கூட்டம் காணப்பட்ட ஈரோடு பஸ் ஸ்டாண்டில், மாலையில் பயணிகள் கூட்டம் அதிகரித்தது. பஸ்கள் வந்த ஓரிரு நிமிடத்திலேயே நிரம்பி கிளம்பின.