உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மரம் வேரோடு முறிந்து சாலை குறுக்கே விழுந்ததால் பாதிப்பு

மரம் வேரோடு முறிந்து சாலை குறுக்கே விழுந்ததால் பாதிப்பு

புன்செய்புளியம்பட்டி, பவானிசாகர் மற்றும் புன்செய் புளியம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயிலுடன் வறண்ட வானிலை நீடித்து வந்தது. இதனால் மதிய நேரங்களில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பவானிசாகர், தொட்டம்பாளையம், புன்செய் புளியம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்தது.சாரலாக துவங்கிய மழை படிப்படியாக கன மழையாக மாறியது. ஒரு மணி நேரம் மழை பெய்ததால், விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கியது. பலத்த காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல், புன்செய் புளியம்பட்டி மாதம்பாளையம் சாலை, நகராட்சி மண்டபம் எதிரே இருந்த மரம் வேரோடு முறிந்து குறுக்கே விழுந்தது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது. நேற்று காலை நிலவரப்படி, பவானிசாகரில், 8 மி.மீ.,மழை பதிவானது. தொடர்ந்து மழை பெய்தால் சுற்றுவட்டார குளம், குட்டை, தடுப்பணைகளுக்கு ஓரளவுக்கு நீர் வர வாய்ப்புள்ளது. கிணறுகளில் நீர் ஊற்றெடுக்க துவங்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை