வ.உ.சி., சிறுவர் பூங்கா சுற்றுச்சுவர் சேதம்
ஈரோடு, :ஈரோடு பஸ் ஸ்டாண்ட் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான வ.உ.சி., பூங்கா உள்ளது. இதன் வளாகத்தில் சிறுவர் பூங்காவும் உள்ளது. பூங்காவின் சுற்றுச்சுவர் இடிந்துள்ளது. இதேபோல் மறுநுழைவு வாயில் பகுதியில் 'கேட்' உடைந்து ஒயர்களால் கட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் சமூக விரோதிகள் எளிதில் உள்ளே செல்ல முடியும். எனவே சேதமான பகுதிகளை உடனடியாக சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.