உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மகள் மாயம்: போலீசில் தாய் புகார்

மகள் மாயம்: போலீசில் தாய் புகார்

ஈரோடு, ஈரோடு, கருங்கல்பாளையம் காவிரி சாலை பச்சியப்பன் சந்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் மனைவி ஸ்வாதி, 23. ஈரோட்டில் உள்ள கல்லுாரியில் படிக்கிறார். ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்தது. படிப்பிற்காக தாய் லலிதாவுடன் தங்கி இருந்தார். கடந்த 6ம் தேதி மதியம் தாய்க்கும், மகளுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் தாய், மகளை அடித்துள்ளார். கோபித்து கொண்ட மகள், கோவையில் உள்ள கணவர் வீட்டுக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து கிளம்பினார். ஆனால் அவர் கோவைக்கு செல்லவில்லை. வீட்டுக்கும் வரவில்லை. இதுபற்றி லலிதா அளித்த புகார்படி, கருங்கல்பாளையம் போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை