மேலும் செய்திகள்
அமெரிக்க அழுத்தத்தால் ஈரான் பணமதிப்பு சரிவு
06-Feb-2025
ஈரோடு: ஈரோடு, பெரியார் நகரை சேர்ந்த மாதேஸ்வரன் மகள் தீபிகா, 24; ஈரோட்டில் ஒரு ஜெராக்ஸ் கடையில் தீபிகா பணியாற்றி வரு-கிறார். கடந்த, 14ம் தேதி வழக்கம்போல் வேலைக்கு சென்றார். மாலையில் மாதேஸ்வரன் சென்று பார்த்தபோது கடை பூட்டியி-ருந்தது. மனைவிக்கு போன் செய்தபோது மகள் வீட்டுக்கு வரா-தது தெரிய வந்தது. தீபிகாவின் மொபைல் போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பல இடங்களில் தேடியும் கிடைக்கா-ததால், ஈரோடு டவுன் போலீசில், மாதேஸ்வரன் புகார் செய்தார். * ஈரோடு, கொளாநல்லி, சின்ன செம்மாண்டாம்பாளையம் மேற்கு வீதியை சேர்ந்தவர் பிரகாஷ், 44; பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். தொழில் நஷ்டத்தால் கடன் தொல்லை ஏற்-பட்டு வீட்டிலேயே இருந்தார். கடந்த, 13ம் தேதி இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்ப வில்லை. மனைவி மாலதி புகாரில், மலையம்பாளையம் போலீசார் தேடி வருகின்-றனர்.
06-Feb-2025