வாரியங்களுக்கு அதிகாரம் கேட்டு ஆர்ப்பாட்டம்
ஈரோடு: தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி., கட்டட தொழிலாளர் சங்கம் சார்பில், ஈரோட்டில் சென்னிசாலை சாலையில் உள்ள நலவாரிய அலுவலகம் முன், மாநில செயலாளர் சின்னசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். வாரிய முடிவுகளை வாரியமே நிறைவேற்ற தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும். நலவாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் சட்டத்தில் உள்ளபடி, இ.எஸ்.ஐ., மருத்துவ வசதி வழங்க வேண்டும். வாரிய முடிவுப்படி ஓய்வூதியம் மாதம், 2,000 ரூபாயாக்க வேண்டும். மனு செய்த அனைவருக்கும் வீடு வழங்க வேண்டும். வீட்டு வசதி திட்டத்தை துவக்கி வைத்து, 3 ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தினர். மாவட்ட தலைவர்கள் தெற்கு குணசேகரன், வடக்கு ரஞ்சித், மாவட்ட செயலாளர்கள் தெற்கு பாபு, வடக்கு கந்தசாமி, ராஜ்குமார், கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.