உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் கேட்டு ஆர்ப்பாட்டம்

வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் கேட்டு ஆர்ப்பாட்டம்

ஈரோடு:தமிழ்நாடு அனைத்து சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.மாவட்ட தலைவர் சம்பத்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜன் வரவேற்றார். பல்வேறு சங்க நிர்வாகிகள் மணிபாரதி, கண்ணன், பழனிசாமி, சோமசுந்தரம் உட்பட பலர் பேசினர். வரையறுக்கப்பட்ட குறைந்தபட்ச ஓய்வூதியம், 7,850 ரூபாய் வழங்க வேண்டும். இலவச மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை