உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஈரோடு:ஈரோடு மாநகராட்சி சார்பில், கிருஷ்ணம்பாளையம் தனியார் பள்ளியில், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.சுகாதார ஆய்வாளர் மணிவேல் தலைமை வகித்தார். அப்போது, வீடு மற்றும் சுற்றுப்புறங்களில் மழைநீர் தேங்கக்கூடிய பொருட்களான தேங்காய் மூடி, பிளாஸ்டிக் டப்பா, பழைய டயர்கள் போன்றவற்றை அப்புறப்படுத்த வேண்டும், டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் முறை, டெங்கு பரவலை கட்டுப்படுத்துவது, காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அருகிலுள்ள மருத்துவமனைக்கு உடனடியாக சென்று பரிசோதனை செய்து கொள்வது உட்பட பல்வேறு தகவல்களை மாணவ, மாணவியர் மத்தியில் எடுத்துரைக்கப்பட்டது. இதையடுத்து, டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் கலன்களின் மாதிரிகள் வைக்கப்பட்டிருந்ததை மாணவ, மாணவியர் பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை