உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வளர்ச்சி திட்டப்பணி ஆய்வு

வளர்ச்சி திட்டப்பணி ஆய்வு

ஈரோடு:ஈரோடு யூனியனுக்கு உட்பட்ட பல்வேறு துறைகளில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை, கலெக்டர் கந்தசாமி ஆய்வு செய்தார். ஈரோடு சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 3 கோடி ரூபாயில் கட்டப்படும் சிறு விளையாட்டு அரங்க கட்டுமான பணிகளை ஆய்வு செய்து, பணி காலம் குறித்து கேட்டறிந்தார். நசியனுார் பஞ்., வில்லரசம்பட்டி, வேட்டைபெரியபாளையம் கிராமத்தில், 4.59 லட்சம் மானியத்தில் சொட்டு நீர் பாசன அமைப்பு ஏற்படுத்தப்பட்டதை உறுதி செய்தார். நசியனுார் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க ரேஷன் கடையில் அத்யாவசிய பொருட்கள் வினியோகத்தை உறுதி செய்து, கார்டுதாரர்களிடம் குறை கேட்டறிந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை