உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாரியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபாடு

மாரியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபாடு

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் கண்ணனுார் மாரியம்மன் கோவிலில், ஆடி திருவிழா சிறப்பாக நடந்தது.பள்ளிப்பாளையம், ஆர்.எஸ்., சாலையில் பிரசித்தி பெற்ற கண்ணனுார் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஆடி, 18ல், பொங்கல் விழா சிறப்பாக நடத்தப்படும். இந்த விழாவில், நாமக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர்.போக்குவரத்து இல்லாத காலகட்டத்தில், மாட்டு வண்டியில் வந்து, திருவிழாவில் கலந்து கொள்வர். அந்தளவுக்கு சிறப்பு பெற்ற பழமையான கோவிலாகும். இந்தாண்டு திருவிழா, கடந்த ஆடி, 1ல், துவங்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு, பக்தர்கள் தீர்த்தக்குடம், அலகு குத்தி வந்தனர். நேற்று அதிகாலை முதலே பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ