உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வயிற்று போக்கு தடுப்பு முகாம்

வயிற்று போக்கு தடுப்பு முகாம்

ஈரோடு, தமிழகத்தில் நாளை முதல் ஜூலை, 31 வரை தீவிர வயிற்று போக்கு தடுப்பு முகாம் அனைத்து அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்களில் நடத்தப்பட உள்ளது. ஈரோடு மாவட்டத்தில், 5 வயதுக்கு உட்பட்ட, 1 லட்சத்து, 24,088 குழந்தைகள் உள்ளனர். இந்த முகாமை பயன்படுத்தி, அனைத்து அங்கன்வாடி மையங்கள் மூலம், குழந்தைகளின் தாயார், ஜிங்க் மாத்திரை, ஓ.ஆர்.எஸ்., உப்பு சர்க்கரை கரைசல் பெற வேண்டும். பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் அவசியம், கை கழுவும் முறை பற்றி விளக்கப்படும். பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பாதுகாப்பான குடிநீர், கை கழுவும் முறைகள் நலக்கல்வி மூலம் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை