உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சத்துணவு ஊழியர் மாவட்ட மாநாடு

சத்துணவு ஊழியர் மாவட்ட மாநாடு

ஈரோடு: தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க ஈரோடு மாவட்ட மாநாடு, மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமையில் ஈரோட்டில் நடந்தது. துணை தலைவர் விஜயன் அஞ்சலி தீர்மானம் படித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் சங்கீதா வரவேற்றார். மாநில துணை தலைவர் மு.தமிழரசன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் விஜயமனோகரன், பிற நிர்வாகிகள் ரமேஷ், சீனிவாசன் உட்பட பலர் பேசினர்.சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும். கடந்த, 2016-17ல் உதவியாளர்களாக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு சமையலர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடமே வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு பணிக்கொடை, 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். காஸ் சிலிண்டரை அரசே நேரடியாக மையங்களுக்கு வழங்க வேண்டும். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, அரசு மானியம் ஒரு மாணவருக்கு, 5 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !