உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தீபாவளி விற்பனை இலக்கு ரூ.2.93 கோடி

தீபாவளி விற்பனை இலக்கு ரூ.2.93 கோடி

ஈரோடு, காந்தி ஜெயந்தியை ஒட்டி, ஈரோடு யூனியன் அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு கலெக்டர் கந்தசாமி, நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனருகே உள்ள காதி கிராப்ட் விற்பனை நிலையத்தில், காந்தி படத்துக்கு மரியாதை செலுத்தி, தீபாவளி கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனையை துவக்கி வைத்தார். நிகழ்வில் அவர் பேசியதாவது:ஈரோடு மாவட்டத்தில், 2 கிராமிய நுால் உற்பத்தி நிலையம் செயல்படுகிறது. கடந்தாண்டை போல் நடப்பாண்டும், 2025-26ம் ஆண்டுக்கு, 2.93 கோடி ரூபாய்க்கு கதர் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு கதர் ரகங்கள் விற்பனை செய்திட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், மருத்துவ பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்பில் பணி செய்வோர் ஆகியோருக்கு, 10 சம தவணைகளில் திரும்ப செலுத்தக்கூடிய கதர் துணிகள் கடனாக வழங்கப்படுகிறது. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை