மேலும் செய்திகள்
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
09-Oct-2025
தி.மு.க., செயற்குழு கூட்டம்
04-Oct-2025
தாராபுரம், தாராபுரம் சட்டசபை தொகுதிக்கான வாக்குச்சாவடி முகவர் கூட்டம், தாராபுரத்தை அடுத்த கரையூர் அருகே நேற்று மாலை நடந்தது. மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி, ஈரோடு எம்.பி., பிரகாஷ், ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் உள்பட, 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். காணொலி காட்சியில் கூட்டுறவு துறை அமைச்சர் சக்கரபாணி, பூத் கமிட்டி பணி குறித்து பேசினார். நிகழ்ச்சியில் ஒலி-ஒளி சரியாக இல்லாததால், நிர்வாகிகள் செல்போனை பார்த்தவாறும், தங்களுக்குள் பேசியபடியும் இருந்தனர். இந்நிலையில் மின்தடையும் ஏற்பட்டது. இதனால் சோர்வடைந்த நிர்வாகிகள், பெருமளவு மண்டபத்திலிருந்து வெளியேறி சென்றனர். சொற்பமான நிர்வாகிகளே அமைச்சருடன் நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்றனர்.
09-Oct-2025
04-Oct-2025